மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு வழங்கவுள்ள அமெரிக்கா

#America #government #Missile #Israel #War #Biden #Hamas
Prasu
2 years ago
மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு வழங்கவுள்ள அமெரிக்கா

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது.

இந்த சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4