தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #SriLanka #Lanka4 #information #Cyclone
Mani
2 years ago
தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் கடந்த 19ம் தேதி காலை நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே நாளில் நள்ளிரவில் தென்மேற்கு அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவான புயலுக்கு ‘தேஜ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தீவிர புயலாக உருவெடுத்து ஓமன் மற்றும் ஏமன் இடையே வரும் 25ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலால் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேஜ் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக்கடலில் உள்ள சகோத்ரா (ஏமன்) நகரை நோக்கி 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4