நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

#India #Earthquake #swissnews #2023 #Tamilnews #Nepal #Breakingnews
Mani
2 years ago
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

நேபாளத்தில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் கடந்த 3ம் தேதி இதேபோன்றதொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டு இருந்தது.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றனர். சில வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4