கொழும்பில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்களில்!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்களில்!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (21.10) பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

images/content-image/1697890956.jpg

இதேவேளை, பொத்துவில் குறினியாங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!