யாழ்ப்பாணத்துக்குள்ளால் ஊடுருவும் இந்தியாவும் கொழும்பிலிருந்து நகரும் சீனாவும்!

#India #SriLanka #China
Lanka4
8 months ago
யாழ்ப்பாணத்துக்குள்ளால் ஊடுருவும் இந்தியாவும்  கொழும்பிலிருந்து நகரும் சீனாவும்!

யாழ்ப்பாணத்துக்குள்ளால் ஊடுருவும் இந்தியாவும் அதன் வர்த்தகமும், உளவுப்படைகளும், கொழும்பிலிருந்து நகரும் சீனாவும் அதன் ஆதிக்கமும். இது இலங்கைக்காவோ, மக்களுக்காகவோ இல்லை தமது போட்டியும் பாதுக்காப்புக்குமே. 

 இந்தியாவுக்கு தேவைப்படின் நாட்டுக்குள் பிரிவினைக்கு உதவுவதும், தமக்கு அடங்கவில்லையோ போட்டுத்தள்ளுவதும், கண்டறிந்த உண்மை. இப்பொழுது தாழில் உள்ள செல்வந்தர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை முகமூடி போட்டும் பகிரங்கமாகவும் இந்திய உளவுப்படைகள் விருந்தாளிகள் போலவும் பிரமுகர்கள் போலவும் இயக்குகிறது. 

 இப்பொழுது சில பொது பல செயற்பாட்டர்களையும் குறி வைத்துள்ளது. சீனாவோ இலங்கை அரசின் குடும்பியில் கை சைத்துள்ளது. இலங்கையின் பொருளாதரம் கச நோய்க்காரன் எலும்புக்கூடாக மாறியதுபோல ஆகிய சூழலை வைத்து ஒப்பந்தக் கடன், வட்டி இல்காத கடன், நிபந்தனை அற்ற கடன் என கடன் கொடுத்து இலங்கையை ஒரு பரம்பரைக் கடன்காரனாக ஆக்குகிறது. 

 முதலின் இலங்கை அரசோ மக்களோ பிற நாட்டிடம் இரு ந் து கடன் பெறும் முன்னர் தமது இலங்கையின் பிற்காலம் எப்படி ஆகும் என் யோசிக்கவேண்டும். அரசின் நோக்கம் மக்கள் நலனோ இலங்கையின் எதிர்காலமோ அல்ல தத்தமது ஆட் சி நிலைக்கவேண்டும். 

அதற்கு பிற நாட்டிடம் இரு ந் து பிச்சை எடுத்து மக்களுக்கு இனாம் கொடுத்து சோம்போறிகளாக்கி வாயை அடைத்து ஒவ்வொரு கட்சிகளின் பின்னால் கொறட்டை விட வைப்பதே. இலங்கையில் எக்கட்சி சொன்னதை செய்தது? அவற்றை நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.

 உண்மையைக் கூறினால் மக்கள் ஆதரவு கிடையாது போய்விடும். மக்களே நீங்கள் விழிக்காவிடின் மாற்று இனம், மதம், சாதிகளுக்குள் நடக்கும் மௌனப்போர் ஒவ்வொரு மொழி மீதும் நடக்கும் என்பது நிச்சயம். நாம் மக்களுக்கு கூற முடியுமே தவிர சிந் திக்க்கவேண்டியது மக்கள். 

 உங்களுக்காக இல்லாவிடிலும் உங்கள் வரும்காலத்துக்காக யோசியுங்கள். ஒரு சாதியையோ, மததத்தையோ, மொழியையோ காப்பது பின் இருக்கட்டும். முதலில் நீங்கள் உங்கள் குடும்பத்த்கை பாருங்கள் ஆம் ஆணிவேரை பலமாக்குங்கள். 

பக்கவேரும், கிழைகளும் பூக்களும் காய்களும் தானாக தரமாக கிடைக்கும். Lanka4 ஊடகத்தின் நோக்கமும். இதுவே.