கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுப் பணி!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுப் பணி!

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.

 இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

 இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!