இந்தியா இராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறியுள்ளது - ஜஸ்டின் ட்ரூடோ!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியா இராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறியுள்ளது - ஜஸ்டின் ட்ரூடோ!

40 இராஜதந்திரிகளுக்கு இராஜதந்திர விலக்குரிமையை ரத்து செய்ததன் மூலம், இந்தியா இராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தியா வியன்னா ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், இந்த நடவடிக்கை குறித்து உலகின் அனைத்து நாடுகளும் கவலைப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன் இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை வழக்கம் போல் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4