IMF இடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 660 மில்லியன் டொலர்!

#SriLanka #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
IMF இடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 660 மில்லியன் டொலர்!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 03 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவான கடனின் இரண்டாம் தவணை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் ஊழியர் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கிடைக்கும் எனவும், இலஙை்கைக்கு வழங்கப்படும் மொத்த நிதி உதவியானது 660 மில்லியன் டொலராக அதிகரிக்கும் எனவும், இலங்கை மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். 

நேற்று (210.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் ஒக்டோபர் மாதம் மரகேஷில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டம் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல்களை அடுத்து, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் முதல் மதிப்பீடு தொடர்பாக பணியாளர் உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, ஆனால் தொடர்ந்தும் குறைந்த வளர்ச்சியால் பொருளாதார மீட்சிக்கு இன்னும் உத்தரவாதம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!