வைத்தியசாலைகளில் மருந்து விநியோக முறைமையில் பாரிய அபாயநிலை!

#SriLanka #Hospital #Medical #Medicine
Mayoorikka
2 years ago
வைத்தியசாலைகளில் மருந்து விநியோக முறைமையில் பாரிய அபாயநிலை!

நாட்டில் மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டார்.

images/content-image/2023/10/1697848341.jpg

 இந்த நிலைமை தொடர்ந்தால் மருந்து விநியோக முறைமையில் பாரிய அபாயம் ஏற்படுமெனவும் அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ சுட்டிக்காட்டினார்.

 மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திப்பதற்காக நிதியமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!