முடிவிற்கு வந்த இத்தாலிய பிரதமரின் 10 ஆண்டு கால காதல் வாழ்க்கை

#PrimeMinister #Women #Love #couple #Germany
Prasu
2 years ago
முடிவிற்கு வந்த இத்தாலிய பிரதமரின் 10 ஆண்டு கால காதல் வாழ்க்கை

ஜியாம்ப்ருனோவும் மெலோனியும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் உறவில் இருந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தனது நீண்டகால காதலர் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிந்ததாக அறிவித்தார். அவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜார்ஜியா இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கிட்டத்தட்ட 10 வருடங்கள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான எனது உறவு இங்கே முடிவடைகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டன. 

அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாம் இருந்த தருணங்களைப் பாதுகாப்பேன், நமது நட்பைப் பாதுகாப்பேன், தன் தாயை நேசித்து, தந்தையை நேசிக்கும் ஏழு வயதுச் சிறுமியை எப்படியும் பாதுகாப்பேன். என்னிடம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, இந்த முடிவுக்குப் பிறகு ஜியாம்ப்ரூனோவின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது என்றும் எதிர்காலத்தில் அவரது நடத்தை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4