டயானா கமகே தாக்குதல் விவகாரம் - சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட காணொளி ஆதாரங்கள்!
#SriLanka
#Parliament
PriyaRam
2 years ago
டயனா கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தாம் சபையில் இல்லாதபோது, டயனா கமகேவினால், தமது உறுப்பினர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தாம் சபாநாயகரை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் காணொளியையும் காண்பித்துள்ளதாகவும், இதன்போது, யார் அநாகரீகமாக நடந்துக் கொண்டது மற்றும் யார் கைப்பையினால் தாக்குதல் நடத்தியது என்பதை சபாநாயகரிடம் தெளிவாகக் காண்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடந்த பிரச்சினையென்பதால், சபாநாயகர் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.