பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

#SriLanka #Sri Lanka President #Police #Parliament
Mayoorikka
2 years ago
பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

கடந்த சில வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் பேரவை இது தொடர்பில் விரிவாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் இந்தப் பொலிசார் தொடர்பில் பெரும் ஏமாற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

images/content-image/2023/10/1697794591.jpg

 இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவிக்கையில், “தற்போது தென் மாகாணத்தில் பொலிஸாரால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.பொலிஸாரின் ஐ.பி கொல்லப்பட்டதாகக் கூறி பொலிஸார் பலர் இடமாற்றம் கேட்கின்றனர். 

காவல்துறைக்கு துபாயில் இருந்து அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் வகையில் அழைப்புகள் வருகின்றன" என்று இராஜாங்கஅமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!