சீனாவின் முதல் விகாரையில் இலங்கையின் பாரம்பரிய ஸ்தூபி: ஜனாதிபதி விடுத்த பணிப்புரை
சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினான் மாகாணத்தில் உள்ள "வெள்ளைக்குதிரை" கோவில் வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் கோவில் மற்றும் ஸ்தூபி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பீஜிங்கில் விகாரையின் தலைவர் யின் லீ தேரர் மற்றும் “சுது துரங்க” விகாரையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் "வெள்ளைக்குதிரை" ஆலய வளாகத்தில் இலங்கை விகாரை மந்திர் நிர்மாண யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் பணிகளை ஆரம்பித்து ஆலய திட்டங்களை புதிதாக தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
பாஹியன் பிக்கு இலங்கையிலிருந்து சீனாவுக்கு எடுத்துச் சென்ற பௌத்த பாலி வேதங்களின் பிரதிகள் இந்த விகாரையில் வைப்பதற்காக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.