யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#Jaffna
#Airport
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைக்காக 200 மில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.