சிறுவன் மீது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதல் - யாழில் கோர சம்பவம்!

#SriLanka #Jaffna #NorthernProvince #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
சிறுவன் மீது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதல் - யாழில் கோர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் , தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த உறவினரான சிறுவன் , உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

images/content-image/2023/10/1697789327.jpg

அதனை அவதானித்த சிறுவனின் பெற்றோர் , தமது பிள்ளையை இளைஞனிடம் இருந்து பாதுகாத்து , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , பலாலி பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து பலாலி பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!