ஹர்த்தால்! யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவு! மக்கள் வழமையான செயற்பாட்டில்

#SriLanka #Jaffna #Harthal
Mayoorikka
2 years ago
ஹர்த்தால்! யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண  ஆதரவு! மக்கள் வழமையான செயற்பாட்டில்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. 

images/content-image/2023/10/1697781112.jpg

 தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

images/content-image/2023/10/1697781175.jpg

தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.

images/content-image/2023/10/1697781262.jpg

அரச நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் கருதி திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4