வரலாற்றில் முதல் முறையாக யாழிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஆதிவாசிகள்!
#SriLanka
#Jaffna
#NorthernProvince
PriyaRam
2 years ago
வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோவின் தலைமையிலான 60 பேர் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே நாளையும், நாளை மறுதினமும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் யாழில் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு அவர்கள் செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.