அமெரிக்கர்களுக்கு கடும் பயண எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத் துறை!

#America #world_news #Israel #War
Mayoorikka
1 year ago
அமெரிக்கர்களுக்கு கடும் பயண  எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத் துறை!

உலகளவில் வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க பிரஜைகளை வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

 அமெரிக்க குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது. இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கப் பயணிகளை வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

images/content-image/2023/10/1697765986.jpg

 பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக காஸா பகுதிக்கு பயணம் வேண்டாம் என்ற மிகக் கடுமையான எச்சரிக்கையை வெளியுறவுத்துறை விடுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஹமாஸ் தாக்குதல் காரணமாக அமெரிக்கர்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 7,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை விட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

 செவ்வாயன்று, இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவுடைய போராளிக் குழுவான ஹிஸ்பொல்லாவுக்கும் இடையே ஏவுகணை மற்றும் பீரங்கி பரிமாற்றங்கள் காரணமாக லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று வெளியுறவுத்துறை தனது பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இஸ்ரேல் மற்றும் கமாஸ் யுத்தம் விரைவில் முடிவுக்கு வர அமெரிக்கா முழு கவனம் செலுத்தி வருகிறது. எனவேதான் கமாஸ் நட்டுமல்ல அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யா, சீனா, ஈரான் மறும் தீவிரவாத அமைப்புக்கள், அமெரிக்காவுடன் நல்ல உறவோடு நட ந் தாலும் கட்டார் போன்ற இஸ்லச்மிய அடிப்படைவாத நாடுகள் சில மறைமுகமாக கமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு உதவுவதாகவும் அப்படியான நாட்டிலும் அமெரிக்கர்களுக்கு அபாயம் உள்ளதாகவும். கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!