அம்பாறை மாவட்ட செயலாளரை வீட்டுக்காவலில் வைத்த பிரதேசவாசிகள்!

#SriLanka #Ampara #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அம்பாறை மாவட்ட செயலாளரை வீட்டுக்காவலில் வைத்த பிரதேசவாசிகள்!

கல்முனை பிரதேசவாசிகளால் அம்பாறை மாவட்ட செயலாளர் சுமார் 2 மணிநேரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

அம்பாறை மாவட்ட செயலாளர்  சிந்தக அபேவிக்ரம இன்று (19.10) காலை களப்பயணத்திற்காக கல்முனை வடக்கு பிராந்திய உப செயலாளர் காரியாலயத்திற்கு வருகை தந்ததையடுத்து பிரதேசவாசிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். 

அங்கு, மாவட்டச் செயலாளர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த அலுவலகத்தில் சிக்கிக் கொண்டார்.   அப்பகுதி மக்களுக்கு நியாயமற்ற முறையில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!