கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள 20 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

#SriLanka #Colombo
PriyaRam
2 years ago
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள 20 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள் விற்பனை செய்யப்படும் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள 20 கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு நுகர்வோர் அதிகார சபையினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விற்பனை நிலையங்களில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் கைத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களுக்கு உத்தரவாதச் சான்றிதழ் வழங்காமை, SLS தரத்திற்கு இணங்காத சாதனங்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

images/content-image/2023/10/1697714300.jpg

நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று புறக்கோட்டையில் கைத்தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டனர்.

இந்த நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில சாதனங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!