வியட்நாமில் டெங்கு பாதிப்பு அதிகரித்து

#people #world_news #2023 #Breakingnews #Fever #Vietnam #Dengue
Mani
2 years ago
வியட்நாமில் டெங்கு பாதிப்பு அதிகரித்து

வியட்நாமில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை, ஒருவாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து, டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து, இதுவரை மொத்தம் 99,639 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள். மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், தலைநகரில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரண்டு தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன. வியட்நாமில் இந்த ஆண்டு டெங்குவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4