நிறுத்தப்படுகிறது நாகை-காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை!

#India #SriLanka #NorthernProvince #Ship
PriyaRam
2 years ago
நிறுத்தப்படுகிறது நாகை-காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமையுடன் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

images/content-image/2023/10/1697692864.jpg

எனினும், வடகிழக்குப் பருவ மழை எதிர்வரும் 23ஆம் திகதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!