மாணவர்களை இலக்கு வைத்து புதிய வியூகம்!
#SriLanka
#Police
#drugs
#School Student
PriyaRam
2 years ago
இலங்கையில், பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகம் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து மாணவர்களிடையே விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட நகரங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து விநியோகிக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆரம்பித்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.