பலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப நடவடிக்கை!
#SriLanka
#world_news
#Israel
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
காஸா பகுதியில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களுக்கு நாளை (20.10) மனிதாபிமான உதவிகளை அனுப்ப முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
'ரஃபா' நுழைவாயிலை திறக்க எகிப்து அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இதனைத் தெரிவித்திருந்தார்.
சுமார் 13 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் பல குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி அங்கு ஏராளமான மக்களை கொன்றனர். பின்னர் இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியது.
இதுவரை இரு தரப்பிலும் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 200 பேர் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.