மலையக பகுதியில் கேட்கும் மர்ம ஒலி : குடிநீரும் வற்றியதால் அதிர்ச்சியில் மக்கள்!

#SriLanka #NuwaraEliya #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலையக பகுதியில் கேட்கும் மர்ம ஒலி : குடிநீரும் வற்றியதால் அதிர்ச்சியில் மக்கள்!

வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் மர்ம ஒலி கேட்பதாக மக்கள் கூறிய நிலையில், அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில், தற்போது கொத்மலை - ஹதுனுவெவ பிரதேசத்தில் திடீரென குடிநீர் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது அந்த பிரதேசவாசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

images/content-image/1697681124.jpg

பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் அன்றாடம் உபயோகித்து வந்த நீர் நிலைகள் திடீரென வறண்டு போனது ஆச்சரியமாக உள்ளதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் 4 நாட்கள் உறங்காமல் ஒரே இடத்தில் இரவு பகலாக கலந்துரையாடி தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!