பயணியிடம் இருந்து தங்கத்தை எடுத்துச்சென்ற இரு அதிகாரிகள் கட்டுநாயக்காவில் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுற்றுலா பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், 600 கிராம் தங்கம் மற்றும் 600 கிராம் தங்கம் கலந்த ஜெல் போன்ற இரண்டு பொதிகளை பலவந்தமாக எடுத்துச் சென்ற குற்றத்திற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணி ஒருவரிடம் இருந்து 15 மில்லியன் பெறுமதியான தங்கத்தை அவர்கள் பலவந்தமாக எடுத்துச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிம்புலப்பிட்டிய மற்றும் முனமல்தெனிய பிரதேசங்களில் வசிக்கும் .50 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.