எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து

#Flight #Airport #Pakistan #Fuel #cancelled
Prasu
2 years ago
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து


பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.

 தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4