ஹரக் கட்டாவுக்கு உதவிய பல பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

#SriLanka #Police #Investigation #sri lanka tamil news
Prathees
2 years ago
ஹரக் கட்டாவுக்கு உதவிய பல பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்Lள்ள நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 பொலிஸ் காவலில் உள்ள மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் காணப்பட்ட உரிமையற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!