கொலைக்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரை!

#SriLanka #Kilinochchi #Crime #fire
Mayoorikka
2 years ago
கொலைக்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரை!

கொலைக்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் வைத்து ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

images/content-image/2023/10/1697620278.jpg

 கிளிநொச்சி கல்லாறு பகுதியிலிருந்து எழுதுமட்டுவாள் பகுதிக்கு வேலைக்காக சென்ற 28 வயதுடைய நபரே கடந்த மாதம் இவ்வாறு நால்வரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கை்து செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகரபர் ஒருவரது வீடே இவ்வாறு நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

images/content-image/2023/10/1697620301.jpg

பெற்றோல் பயன்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தின் பின்னர் அவ்வீட்டில் எவரும் இல்லலை என்பதால் உயிராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1697620325.jpg

 ஆயினும், பெறுமதிமிக்க சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் பளை பொலிசார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!