கொக்கவெவ பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொக்கவெவ - துடுவெவ பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து நேற்று (17.10) மாலை உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி தாய் மற்றும் சிறுமியொருவர் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கொக்கவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உயிரிழந்த சிறுமியின் தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 வயதும் 05 மாதமுடைய சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



