காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பாக உள்ளனர்

#SriLanka #Israel #War
Prathees
2 years ago
காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பாக உள்ளனர்

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களுக்கு மத்தியில் பல நாடுகள் தமது பிரஜைகளை வெளியேற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

 இந்தியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளும் தங்கள் குடிமக்களை வெளியேற்றி வருவதாக அவர் கூறினார். 

 இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் சூழ்நிலை தற்போது அயல் நாடுகளிலும் தலையிட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, தற்போது காசா பகுதியில் 17 இலங்கையர்களும் மேற்குக் கரையில் 06 இலங்கையர்களும் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 

தற்போது அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றார். தற்போது இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் காரணமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் ஒருவர் மீண்டும் இலங்கைக்கு வருமாறு கோரினால் சம்மேளனம் தலையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4