காசாவின் மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் : 500 பேர் பலி!

காசா பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் நேற்று (17.10) வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஒருவாரக் காலமாக மோதல் போக்குநீடித்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
காசா பகுதியை ஆளும் ஹமாஸுடனான போரில் அந்நாட்டுக்கு ஆதரவைக் காட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததற்கு முன்னதாக இது நடந்தது.
இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன பிரதமர் இது "கொடூரமான குற்றம், இனப்படுகொலை" என்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.



