ஐப்பசி மாத சிறப்பு பூஜை; சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு

#India #Temple #Tamil People #people #2023 #Kerala #Special Day
Mani
2 years ago
ஐப்பசி மாத சிறப்பு பூஜை; சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கம் போல ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 18ம் தேதி முதல் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம் மற்றும் உதயாஸ்தமய பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அத்துடன் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நவம்பர் 10ம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோயில் நடை திறந்திருக்கும் நாட்களில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!