இந்த வாரத்தில் பல நிறுவனங்கள் கோப் குழு முன் முன்னிலையாகவுள்ளனர்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news
Thamilini
2 years ago
இந்த வாரத்தில் பல நிறுவனங்கள் கோப் குழு முன் முன்னிலையாகவுள்ளனர்!

இந்த வாரத்தில், பல நிறுவனங்கள்  கோப் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளன.  

இதன்படி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இன்று (17.10) கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் நாளைய (18.10) தினம் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் அதிகாரிகள் கோப் குழு முன்னிலையிலும், நாளை மறுநாள் (19.10) அரச அடமானம் மற்றும் முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் கோப் குழு முன்னிலையிலும் அழைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, நாளைய தினம் கூடவுள்ள அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுவிற்கு நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் இந்த வாரம் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

அரசாங்க நிதி தொடர்பான குழுவும் இன்றும் 20ம் திகதியும் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!