உலக அழகி போட்டியின் முன்னாள் போட்டியாளர் ஒருவர் 26 வயதில் மரணம்!

#Death #world_news #Miss World #2023 #Breakingnews #Died #ImportantNews #cancer
Mani
2 years ago
உலக அழகி போட்டியின் முன்னாள் போட்டியாளர் ஒருவர் 26 வயதில் மரணம்!

உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கீமோதெரபி, ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்து இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இறந்து விட்டார். அவரது மறைவுச் செய்தி உருகுவே மற்றும் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவருடைய சகோதரர் மெய்க் டி அர்மாஸ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சிறிய சகோதரியே உயரே செல்லவும். எப்போதும் என்றென்றும் என பதிவிட்டு உள்ளார்.

அவரது மரணத்திற்குப் பிறகு, உருகுவேவின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ, என் வாழ்நாளில் நான் சந்தித்த மிக அழகான பெண்களில் ஒருவர் என்று தெரிவித்து உள்ளார்.

அதேபோல், 2021 ஆம் ஆண்டு உருகுவே அழகி லோலா டி லாஸ் சான்டோஸ், எனக்கு அளித்த அனைத்து ஆதரவுக்காகவும், அன்பு, மகிழ்ச்சி என இன்றளவும் அவை என்னுடன் மீதமுள்ளன. அதற்காக எப்போதும் உங்களை நான் நினைவுகூர்வேன் என பதிவிட்டு உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4