3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

#Tamil Nadu #Tamil People #Rain #HeavyRain #Breakingnews #ImportantNews #Cyclone
Mani
2 years ago
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இன்று திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் கோவை மாவட்டம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4