கிருலப்பனையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை!
#Crime
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், தாயாரை பணத்திற்காக தொந்தரவு செய்த போது அவரது சகோதரன் மார்பில் கத்தியால் குத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.