தீக்குளித்த நபரை மீட்கச் சென்ற பொலிஸாருக்கு நிகழ்ந்த விபரீதம்!

#SriLanka #Batticaloa #Police #Hospital #Ampara #fire
Mayoorikka
2 years ago
தீக்குளித்த நபரை மீட்கச் சென்ற பொலிஸாருக்கு நிகழ்ந்த விபரீதம்!

வாழைச்சேனை, மாஞ்சோலை பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படும் ஒருவரைக் காப்பாற்ற முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தீ வைத்த நபர் தாக்கியதாக வாழச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

images/content-image/2023/10/1697435028.jpg

 தீக்காயங்களுக்கு உள்ளான வாழைச்சேனை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் 38 வயதுடைய நபரும் தீக்குளித்து எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரியும் தனது மனைவியை பணம் அனுப்புமாறு வற்புறுத்தியதன் காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி 38 வயதுடைய நபர் தனது உடலுக்கு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!