அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் பயணம்!
#Israel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றடைந்துள்ளார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தார், ஜோர்டான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்ற அவர் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.
தரை மற்றும் வான்வழியாக காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கனின் விஜயம் விசேடமானது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.