காசா - ஹமாஸ் மோதல் ; பலி எண்ணிக்கை 2,450 ஆக உயர்வு

#Death #Israel #War #Rescue #Hamas #Gaza
Prasu
2 years ago
காசா - ஹமாஸ் மோதல் ; பலி எண்ணிக்கை 2,450 ஆக உயர்வு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. 

அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இரு பக்கமும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இதில் இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,450 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,200 ஆகவும் உயர்ந்துள்ளது. எனினும் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4