இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்த பிரதமர் நெதன்யாகு

#PrimeMinister #Israel #Military #Visit #Netanyahu
Prasu
1 year ago
இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்த பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. 

அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். 

அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!