காசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதைகளை திறந்து இஸ்ரேல் கால அவகாசம் வழங்கியுள்ளது!
#Tamil People
#world_news
#Israel
#War
#2023
#Tamilnews
#Breakingnews
Mani
1 year ago

மக்கள் கடந்துசெல்ல ஏதுவாக பைட் ஹலோன் - கான் யூனிஸ் வழித்தடத்தில் 3 மணி நேரத்துக்கு எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது எனவும் கூறியுள்ளது.
இதனையடுத்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அதேபோல் எகிப்து எல்லை வழியாக செல்லவும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துநிற்கின்றனர். எனினும் காசாவில் வசிக்கும் 11 லட்சம் மக்களில் ஒரு லட்சம் பேர் கூட இதுவரை வெளியேறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களுடன் 2 ஆவது விமானத்தை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இது மேலும் போர் தீவிரமாக காரணமாக அமையும் என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.



