திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

#India #Temple #Festival #Tamil People #Thirumal #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் அங்குரார் பனம் நேற்று மாலை நடந்தது.

இன்று மாலை 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வரும் 19ம் தேதி நடக்கிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வருகிற 18ம் தேதி மாலை முதல் 20ம் தேதி காலை வரை மலைப்பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

திருப்பதியில் நேற்று 67,785 பேர் தரிசனம் செய்தனர். இதில், 21,284 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4