தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15.10) நடைபெறவுள்ளது. இந்த வருடம் 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குகொள்ளும் அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியான கல்வி வலயங்களில் பரீட்சை பரீட்சார்த்திகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4