காசாவில் உள்ள வெளிநாட்டினர் வெளியேற அனுமதி‘!
#world_news
#Israel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
காசா பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் போரை அடுத்து இரு தரப்பிலும் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்ற நிலையில், அங்குள்ள வெளிநாட்டினர் வெளியேற உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இன்று (14.10) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் காசாவின் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல அனுமதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் கத்தார் ஈடுபட்டதாகவும், பங்கேற்பாளர்கள் பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுக்கள், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவற்றிடம் இருந்து ஒப்புதல் பெற்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.