சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய உத்தேச நாடாளுமன்ற குழு!
#SriLanka
#Easter Sunday Attack
PriyaRam
2 years ago
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.