முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் காணியில் ஆயுதக் களஞ்சியம்

#SriLanka #Arrest #Weapons
Prathees
1 year ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் காணியில் ஆயுதக் களஞ்சியம்

வெல்லவாய, முதலாவது தூண் பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் ஆயுதக் குவிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

 இரண்டு கைக்குண்டுகள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு குண்டு துளைக்காத உடுப்பு, இருபத்தி இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் வெல்லவாய பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!