ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் : மூவர் பலி!

#War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் : மூவர் பலி!

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். ரஷியாவின் பெல்கோரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதனை ரஷிய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த டிரோன் தாக்குதலில் பெல்கோரோட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. 

கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4