கடற்தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன?
#India
#SriLanka
#Fisherman
PriyaRam
2 years ago
மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை இந்தியா கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.