யாழ். உடுப்பிட்டியில் இறந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Police
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சன சமூக நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவருடைய துவிச்சக்கர வண்டியும் சன சமூக நிலைய வாசலில் நிற்கிறது. கரவெட்டி கணவாய் மேற்கு, அந்திரான் பகுதியை சேர்ந்த 74 வயதுடையவர் என்று கூறப்படுகின்றது.

இவர் சன்னதி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டத்தை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
